Sri lakshmi advanced dental care, Vettavalam

Sri lakshmi advanced dental care, Vettavalam "Smile and the world smiles with you"

Replacement of older crowns into Newer one 😊
08/03/2022

Replacement of older crowns into Newer one 😊

கழற்றி மாட்டும் வகையில் பல் செட் 😊Most difficult and satisfying Denture ♥️
08/03/2022

கழற்றி மாட்டும் வகையில் பல் செட் 😊
Most difficult and satisfying Denture ♥️

6 unit Zirconia crown 😊
17/10/2020

6 unit Zirconia crown 😊

Replacement of missing teeth with 6 unit Ceramic Bridge
22/02/2020

Replacement of missing teeth with 6 unit Ceramic Bridge

Patient comes with a complaints of Generalized mobility teeth, so advised total extraction of teeth and Complete denture...
22/02/2020

Patient comes with a complaints of Generalized mobility teeth, so advised total extraction of teeth and Complete denture.. 😊

05/10/2019

சொத்தை பற்கள் தடுக்கும் வழி??!!
How to prevent Dental caries??!!

# காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.

# ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் 'டிசென்சடைசிங்' பற்பசையைப் பயன்படுத்தலாம்.

# பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.

# கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.

# பல் துலக்கியைப் பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.

# ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும்.

# குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

# வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

# பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

# காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

# வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

# குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.

# குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன.

# குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.

# தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.

# நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.

# ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.

பற்களை சுத்தம் செய்தல் (ஸ்கேலிங்)ஸ்கேலிங் என்றால் என்ன?ப்லேக் என்றால் என்ன?எதற்காக ஸ்கேலிங் செய்யப்படுகிறது?எவ்வளவு கால ...
04/10/2019

பற்களை சுத்தம் செய்தல் (ஸ்கேலிங்)

ஸ்கேலிங் என்றால் என்ன?
ப்லேக் என்றால் என்ன?
எதற்காக ஸ்கேலிங் செய்யப்படுகிறது?
எவ்வளவு கால இடைவெளியில் ஸ்கேலிங் செய்ய வேண்டும்?
இதனால் ஏற்படும் விளைவு என்ன?
ஸ்கேலிங் என்றால் என்ன?
பற்களின் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்தின் முக்கியமான அங்கமாகும். உங்களுக்கு என்ன வயதானாலும், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவேண்டும், மேலும் வைத்துகொள்ளவும் முடியும். சரியாக பற்களை நீங்கள் கவனித்து கொண்டால், ஆயுள் காலம் முழுவதும் உங்கள் பற்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். ஸ்கேலிங் மூலம் உங்கள் பற்களையும் ஈருகளையும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்துகொள்ளமுடியும். இந்த வழிமுறை, பற்களின் வெளிப்புறத்தில் படியும், கரைகள், ப்லேக், மற்றும் கால்க்யுலஸ் போன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்ட படிமானங்களை அகற்ற உதவும். இப்படிபட்ட படிமானங்கள் ஸ்கேலிங் மூலம் அகற்றபடாவிட்டால், தொற்றுக்கிருமிகளால் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் ஈருகளையும் அழித்துவிடும். இதனால் பயோரியா மற்றும் பற்களின் இழப்பு ஏற்படலாம். ஸ்கேலிங் ஒரு பாதுகாப்பான மற்றும் இயல்பான வழிமுறையாகும். இது பற்களின் மேல்புரத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. இதை ஒரு பல் நிபுனர் மூலம் தான் செய்து கொள்ள வேண்டும்.



ப்லேக் (Plaque) என்றால் என்ன?
பற்களில் ப்லேக் என்பது, மிருதுவான, பிசுபிசுப்பான, வண்ணமற்ற பேக்டிரியாகிருமிகள் மற்றும் உணவு பொருட்களின் படிவம் ஆகும். அது பற்களின் மேல் உருவாகிகொண்டே இருக்கும். இந்த படிவத்தின் மேல் அந்த பேக்டிரியாகிருமிகள் குடியேறி வேகமாக பெருகி, ஈருகளில் பாதிப்பை ஏற்படுத்த துவங்கும். இதனால் ஈருகளை தொட்டாலே வலி மற்றும் இரத்த கசிவு ஏற்படும். பற்களில் உள்ள ப்லேக்கை 10–14 மணி நேரத்திற்குள் பல்துலக்குவதன் மூலம் சுத்தபடுத்தாவிட்டால், அது கால்க்யுலஸ் ஆகவோ அல்லது டார்டாராகவோ இறுகிவிடும். கால்க்யுலஸாக உருவாகிவிட்டால், பல் துலக்குவதன் மூலம் அகற்ற முடியாது, பல் நிபுனரால் ஸ்கேலிங் மூலம் தான் அகற்ற முடியும்.



எதற்காக ஸ்கேலிங் செய்யப்படுகிறது?
கவனமாக பல் துலக்கி, பல் இடுக்குகளை சுத்தம் செய்தாலும், உருவாகும் கால்க்யுலஸ் அல்லது டார்டாரை, பல் நிபுனர் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்துகொள்வது முக்கியம். பல் நிபுனர் மூலம் சுத்தம் செய்வதில் ஸ்கேலிங் மற்றும் பல் பளபளபாக்குதல் உள்ளடங்கும். ஸ்கேலிங் என்பது, பற்களின் வெளிப்புறத்தில் உள்ள, பாதிக்கப்பட்ட படிவங்கள், கால்க்யுலஸ் அல்லது டார்டாரை, நீக்குவதற்கான சாதாரனமான அறுவை சிக்கிச்சை அல்லாத நிவாரணமாகும். இந்த படிவங்கள் அகற்றப்படாவிட்டால், பெரியோடான்டல் நோய் உண்டாவதற்கு வழிவகுக்கும். அனரோபிக் கிருமிகள் வளர இது மிகவும் சரியான சூழ்நிலையை தரும். இந்த கிருமிகள் வேகமாக அபிவிருத்தியாக தொடங்கி, அதிகபட்ச ஈறுகளை பாதிப்படையச் செய்வதுடன் பற்களுக்கு ஆதாரமாக இருக்கும் எலும்புகளை கறைக்க தொடங்கிவிடுகிறது. இது பற்களின் இறுக்கத்தை படிப்படியாக குறைத்துவிடுகிறது. அப்பொழுது பற்களை காபாற்றுவதற்கான சிகிச்சை மிகவும் நீண்டதாகவும், மற்றும் பிரச்சினைக்குறியதாகவும் ஆகிவிடுகிறது. பற்களை சுற்றியுள்ள திசுக்களை ஆரோக்கியமானதாக்க ஈருகளில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

எவ்வளவு கால இடைவெளியில் ஸ்கேலிங் செய்ய வேண்டும்?
பற்களில் பலேக் உண்டாவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகும். பற்களை துலக்கி இதை நீக்காவிட்டால், 10-14 மணி நேரத்திற்குள் இது டார்டாராக இறுக தொடங்கிவிடுகிறது. இப்படிபட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போன்ற சரியான கால அவகாசத்தில் ஸ்கேலிங் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பற்களை பரிசோதித்துகொள்வது மிகவும் நல்லது. உங்கள் பல் மருத்துவர், உங்களுக்கு ஸ்கேலிங் தேவையா? என்று ஆலோசனை வழங்குவார். ஆரோக்கியமான பற்களுக்காக வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய சரியான வழிமுறைகளை அவர் எடுத்துரைப்பார். ஸ்கேலிங் செய்வதனால் உங்கள் பற்கள் பலம் இழப்பதில்லை, மாறாக ஈறுகளில் உருவாகும் நோய்களை தவிர்க்கும் என்பதை வழியுறுத்தவேண்டும். மேலும், ஸ்கேலிங் செய்வதன் மூலம் ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் அதை கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் மற்ற விபரீதமான நோய்கள் மற்றும் ஊடுருவும் ஈறு நோயாக மாறுவதையும் தவிற்கலாம்.

இதனால் ஏற்படும் விளைவு என்ன?
நல்ல வாய் பகுதி சுகாதாரம், பல விதமான பற்கள் மற்றும் ஈறுகளின் நோயை தவிற்பதுடன், அதற்கான சிகிச்சைக்கும் முக்கியமானது. நல்ல வாய் பகுதி சுத்தம் ஆரோக்கியமான வாய்க்கு வழிவகுக்கும். மேலும் வாய் தான் நமது முழு உடலின் நுழைவாயிலாக விளங்குகிறது. ஆரோக்கியமான வாய், பல விதத்திலும் சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது

சொத்தை பற்களை- அகற்றுவது ! ரூட் கனால் (Root canal) செய்வது! எது நல்லது?எப்பொழுதெல்லாம் பற்களில் தொற்று ஏற்பட்டு பிரச்சனை...
03/10/2019

சொத்தை பற்களை- அகற்றுவது ! ரூட் கனால் (Root canal) செய்வது! எது நல்லது?

எப்பொழுதெல்லாம் பற்களில் தொற்று ஏற்பட்டு பிரச்சனை பெரிதாகிறதோ அதை தீர்க்க 2 வழிகள் உள்ளன அவை:

1.ரூட் கனால் சிகிச்சை

2.பற்களை அகற்றுவது.

ஆனால் பல் மருத்துவ நிபுணர், பல் ஆரோக்கியத்திற்கு ரூட் கனால் சிகிச்சையே சிறந்தது என்று கூறுகின்றனர்.

why is root canal treatment a better option than tooth
பல நோயாளிகள் அதிகமான பல் வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களிடம் பற்களை எந்த வித பக்க விளைவுகளும் இன்றி நீக்க சொல்கின்றனர். ஆனால் இது ஒரு நல்ல தீர்வு இல்லை. ஏனெனில் பற்களை நீக்குவதால் நீண்ட கால சிக்கல்கள் ஏற்படும் என்பது நோயாளிகளுக்கு தெரிவதில்லை.

பற்கள் நீக்கப்படுவதால் என்னாகும் !!
பிரச்சனை என்னவென்றால் பல் நீக்கப்பட்டால் அந்த காலியான பகுதியை நிரப்ப அருகில் சுற்றியுள்ள பற்கள் இடம் பெயரும்.அதனால் கோணலான பற்கள் அமைப்பு (அ) உணவை கடிக்க இயலாமல் போகும் நிலை ஏற்படும்.

தலைவலி,தாடையில் வடிவம் மாறி உறுத்தும்,காது வலி,மயக்கம்,காதுகளில் பல்வகை சத்தம்,கடிப்பது மற்றும் மெல்லுதலில் பிரச்சனை என பல பிரச்சனைகள் ஏற்படும்.மேலும் பற்கள் இப்படி இடம் பெயர்வதால் எளிதாக தளர்ந்து விடும்.இதனால் அதிக பிரச்சனைகள் ஏற்படும்.

செயற்கை பற்கள் :
பல் நீக்கப்பட்டால் அதற்கு பதிலாக செயற்கை பல் ஒன்றை பொருத்தலாம்.செயற்கை பல் பொறுத்த பிக்ஸட் பற்கள் (அ) டென்டல் இம்ப்ளான்ட் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் கொஞ்சம் விலை உயர்ந்தவை .எனவே பற்களை நீக்காமல் ரூட் கனால் செய்யலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ரூட் கனால் :
நிச்சயமாக ரூட் கனால் செய்யும் போது சில பிரச்சனைகள் ஏற்படும்.ரூட் கனால் என்பது பற்களின் இயற்க்கை வேர்களை நீக்கி செயற்கை வேர்கள் பொருத்தப்படும்.

இப்படி செய்யும்போது பல் கடினமானதை கடிக்கும்போது உடைய வாய்ப்புகள் அதிகம்.எனவே தான் ரூட் கனால் செய்யும் போது பல் மீது பாதுகாப்பு வளையம் போன்று கேப் மாட்டப்படும்.இது பல் உடையும் வாய்ப்பைக் குறைக்கிறது.

மருத்துவர் ஆலோசனை :
எனவே தான் பற்களில் எந்த பிரச்சனை என்றாலும் பல் சிகிச்சை மருத்துவரிடம். ஆலோசனை பெற வேண்டும்.அவர் ரூட் கனால் செய்ய பரிந்துரை செய்தால் பற்களை காப்பாற்ற ரூட் கனால் செய்யலாம்.இந்த சிகிச்சை முறை ஆரம்ப கால சிகிச்சைக்கு பிறகு நீண்ட காலம் பற்களை காப்பாற்றும்.

பற்கள் :
பற்களை இழப்பது மற்றும் பற்களின் ஆரோக்கியம் குறைந்து காணப்படுவது தீவிர மருத்துவ நிலைக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சரியான நடவடிக்கை எடுத்தால் பல் இழப்பையும்,உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும். ரூட் கனால் மற்றும் பல் பிரித்தெடுத்தல் இவை இரண்டில் ரூட் கனால் செய்வதே சிறந்தது என்று பல விவாதங்களின் அடிப்படையில் கூறப்படுகிறது.

Surgical excision of peripheral ossifying Fibroma
02/10/2019

Surgical excision of peripheral ossifying Fibroma

Upper Removable denture and Lower full arch replacement 😊
30/07/2019

Upper Removable denture and Lower full arch replacement 😊

Address

NH/234
Vettavalam
606754

Opening Hours

Monday 9am - 1:30pm
4pm - 9pm
Tuesday 9am - 1:30pm
4pm - 9pm
Wednesday 9am - 1:30pm
4pm - 9pm
Thursday 9am - 1:30pm
4pm - 9pm
Friday 9am - 1:30pm
4pm - 9pm
Saturday 9am - 1:30pm
4pm - 9pm
Sunday 9:30am - 12:30pm

Telephone

+919444400816

Alerts

Be the first to know and let us send you an email when Sri lakshmi advanced dental care, Vettavalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri lakshmi advanced dental care, Vettavalam:

Share